பிரித்தானியா விதித்த அதிரடி தடை...! கருணா அம்மானின் அரசியல் எதிர்காலம்
பிரித்தானியா (UK) விதித்திருக்கும் தடையால் தனது அரசியலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) (Vinayagamoorthy Muralitharan) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் (sri lanka) இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான முன்னாள் இலங்கை முப்படை தளபதிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் தளபதி ஆகியோருக்கு பிரித்தானியா (UK) அதிரடியாக தடைகளை விதித்துள்ளது.
உள்நாட்டுப் போரின் போது இழைக்கப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்புக்கூறலைக் கோருவதையும், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் கலாச்சாரத்தைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டே இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மனித உரிமை மீறல்கள்
இந்த தடை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் விநாயகமூர்த்தி முரளிதரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நான் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை. அதனால் இந்த தடை என்னை பாதிக்காது.
எனது அரசியலையும் பாதிக்காது. நான் அப்படியெல்லாம் செயற்பட்டிருந்தால் நான் அங்கு தஞ்சமடைந்த காலப்பகுதியில் பிரித்தானியா என்னை கைது செய்திருக்கலாமே?
ஏன் என்னை பத்திரமாக திருப்பி அனுப்ப வேண்டும்? அப்போது இவையெல்லாம் தெரியவில்லையா?
இவற்றைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளப் போவதில்லை என விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 7 மணி நேரம் முன்
