சரத் பொன்சேகாவுக்கு தடை விதிக்காத பிரித்தானியா : விமல் வீரவன்ச கேள்வி

Shavendra Silva Karuna Amman Sarath Fonseka Wimal Weerawansa United Kingdom
By Sathangani Mar 28, 2025 03:53 AM GMT
Report

யுத்த காலத்தில் இராணுவ தளபதியாக இருந்து கட்டளையிட்ட சரத் பொன்சேகாவுக்கு (Sarath Fonseka) ஏன் பிரித்தானியா தடை விதிக்கவில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச (Wimal Weerawansa) கேள்வியெழுப்பியுள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “யுத்த காலத்தில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித படுகொலைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளான சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட மற்றும் ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது.

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பௌத்த பிக்கு...! அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்கள்

கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பௌத்த பிக்கு...! அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல்கள்

மனித படுகொலைகள்

அதேபோல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய கருணா அம்மானுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு தடை விதிக்காத பிரித்தானியா : விமல் வீரவன்ச கேள்வி | Uk Sanctions To Ex Sl Military Top Fonseka Avoid

யுத்த காலத்தில் இராணுவ தளபதியாக சரத் பொன்சேகா பதவி வகித்தார். அவரது கட்டளைகளையே சவேந்திர சில்வா, ஜகத் ஜெயசூரிய ஆகியோர் பதவி நிலை அதிகாரிகள் என்ற அடிப்படையில் செயற்படுத்தினார்கள். அவ்வாறாயின் ஏன் சரத் பொன்சேகாவுக்கு பிரித்தானியா தடை விதிக்கவில்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பினர் கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதை அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவே தடுத்தார்.

1815 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் மனித படுகொலைகளை படுமோசமாக நடத்தி, காடுகளை அழித்து பல்லாயிரக்கணக்கான யானைகளை கொன்று, தந்தங்களையும், பெறுமதியான சொத்துக்களையும் கடத்திச் சென்ற பெரிய பிரித்தானியா இன்று மனித உரிமைகள் குறித்து இலங்கைக்கு பாடம் கற்பிக்கிறது.

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்

அநுரவின் வடக்கு விஜயம்

விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கைவாதிகளில் பெருமளவிலானோர் பிரித்தானியாவில் வாழ்கிறார்கள். இவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே பிரித்தானியா தற்போது இந்த தடையை விதித்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள் இன்றும் நாட்டில் உள்ளார்கள். பிரித்தானியாவில் தற்போதைய முறையற்ற செயற்பாடு அழிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உயிர்ப்பிக்கும் வகையில் உள்ளது.

சரத் பொன்சேகாவுக்கு தடை விதிக்காத பிரித்தானியா : விமல் வீரவன்ச கேள்வி | Uk Sanctions To Ex Sl Military Top Fonseka Avoid

ஏனெனில் கடந்த காலங்களில் நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடைய தரப்பினர் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். நினைவேந்தல் பகிரங்கமாக அனுஸ்டிக்கப்படுகிறது. பாதுகாப்பு தரப்பு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

சவேந்திர சில்வா, வசந்த கரன்னாகொட, ஜகத் ஜெயசூரிய ஆகியோர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததால் தான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட அரசியல்வாதிகள் வடக்குக்கு தைரியமாக செல்கிறார்கள், அரசியல் செய்கிறார்கள்.

பிரித்தானியாவின் தடை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அறிவிப்பு அதிருப்திக்குரியன. குறித்த தடையை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிடும் தற்றுணிபு அரசாங்கத்துக்கு இல்லை. அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்“ என தெரிவித்தார்.

முதன் முறையாக மூடப்படும் நாட்டின் வான் பரப்பு...!

முதன் முறையாக மூடப்படும் நாட்டின் வான் பரப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மாகியம்பதி, சண்டிலிப்பாய், Scarborough, Canada

02 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்புத்துறை, Scarborough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா, Canada

04 Oct, 2010
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022