இங்கிலாந்தில் கொரோனா தடுப்பு விதிகள் முடிவுக்கு வந்தன
பிரித்தானியாவின் இங்கிலாந்து பிராந்தியத்தில் இதுவரை நடைமுறையில் இருந்த அனைத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விதிகளும் இன்று முதல் சட்டபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளன.
இதன் அடிப்படையில் இனிமேல் இங்கிலாந்தில் முக கவசங்கள் மற்றும் கொரோனா தடுப்பு சான்றிதழ்கள் சட்டப்பூர்வமாகத் தேவையில்லை. இதேபோலவே இத்தாலிபோன்ற ஐரோப்பிய நாடுகளும் தளர்வுகளை அறிவித்துள்ளன.
கொரோனா தொற்றுடன் இனிமேல் இங்கிலாந்து வாசிகள் வாழப் பழகிக்ககொள்வார்கள் என்ற அடிப்படையில் இங்கிலாந்து பிராந்தியத்தில் நடைமுறையில் இருந்த அனைத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விதிகளும் இன்று முதல் சட்டபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.
இனிமேல் இங்கிலாந்து வாசி ஒருவர் முக கவசங்களை அணியவேண்டுமாக இல்லையா என்பதை தீர்மானித்துக்கொள்வது அவரது தனிப்பட்ட விடயமாக இருந்தாலும், லண்டன் போக்குவரத்து சேவைகளில் பயணிப்பவர்கள் கட்டாயம் முக கவசங்களை அணியவேண்டுமென லண்டன் முதல்வர் சாதிக் கான் அறிவித்துள்ளார்.
இதேபோலவே சில வணிக நிறுவனங்களும் தனது அங்காடிகளில் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளன.
இதற்கிடையே எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இங்கிலாந்தில் முதாளர் பாரமரிப்பு இல்லங்கள் மீதான கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் இனிமேல் அனுமதிக்கப்படும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லையெனவும் அறிவிக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடு விதிகளை தளர்த்துவதாக இத்தாலி அறிவித்துள்ளது.
தடுப்பூசி சான்றிதழ் அல்லது எதிர்மறை சோதனைக்கான ஆதாரம் இருந்தால் இனி தனிமைப்படுத்தல் நடைமுறை இல்லையெனவும் அறிவிக்கபட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
