பிரித்தானியாவில் பியா புயல்: வழங்கப்பட்டுள்ள மஞ்சள் எச்சரிக்கை
பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பியா புயல் காரணமாக அங்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எச்சரிக்கையானது நள்ளிரவு முதல் இன்று இரவு 9 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள பெல்ஃபாஸ்ட்,( Belfast) நியூகேஸில் அபான் டைன்(Newcastle upon Tyne) மற்றும் மான்செஸ்டர்(Manchester) ஆகிய இடங்களுக்கே எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
பியா புயல்
பியா புயல் காரணமாக ஸ்காட்லாந்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் 70 முதல் 80 mph வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் மற்ற உயரமான எச்சரிக்கை விடப்பட்ட வடக்கு பகுதிகளில் 65 முதல் 70 mph வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற இடங்களில் 45 முதல் 55 mph வேகத்தில் காற்று வீசக்கூடும் என குறிப்பிப்பட்டுள்ளது.
இந்த புயல் எச்சரிக்கை காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களிலுள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
மேலும் பயணங்களைத் தவிர்க்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவிர்க்க முடியாத பயணங்களாக இருப்பின், மெதுவாக வாகனங்களில் பயணிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
புயலின் போது மின்வெட்டு ஏற்பட்டால் அதை சீர்ப்படுத்த ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |