பௌத்தத்திற்குள் புதைக்கப்படும் தமிழர் பாரம்பரியங்கள்
அண்மைக்காலமாக தமிழர் பிரதேசத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் சில விடயங்கள் திட்டமிட்டு இடம்பெறும் அடாவடித்தனமான செயற்பாடாக காணப்படுகின்றது.
காரணம், தமிழர் பாரம்பரியங்களை கேள்விக்குட்படுத்துவதாகவும் மற்றும் தமிழ் மக்களின் வரலாற்று சான்றுகளை அழித்தொழிப்பதாகவும் சில திட்டமிட்ட சதிகள் இடம்பெற்று வருகின்றது.
வடக்கில் குருந்தூர்மலை விவகாரம், தையிட்டி விவகாரம், வெடுக்குநாறி மலை விவகார வரிசையில் தற்போது கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற உகந்தை முருகன் ஆலயத்திற்கு செல்லும் முன்வாயிலிற்கு முன்பு கடற்கரையின் இடது புறத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம் தொடர்ந்துள்ளது.
இது அங்குள்ள கடற்படையின் உதவியோடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பாரிய அதிர்வலைக்குரிய விவகாரமாக இவ்விடயம் உருவெடுத்துள்ளது.
தொடர்ந்து தமிழ் மக்கள் மீதான அரசின் அடக்குமுறை குறைவதை விட அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.
இவ்வாறு தொடர்ந்து தமிழ் மரபுகள் திட்டமிட்ட ரீதியில் அழிக்கப்படுமாயின் எதிர்காலத்தில் தமிழர் பிரதேசங்கள் ஒட்டுமொத்தமாக அரசின் கீழ் ஒடுக்கப்படாது என்பதற்கு என்ன நிச்சயம்?
அண்மையில், தையிட்டி விவகாரம் மற்றும் தமிழ் மக்கள் காணி சுவீகரிப்பு தொடர்பில் அரசு தரப்பில் வெளியான வர்த்தமானி தொடர்பிலும் அரசின் நிலைப்பாடு என்பது கேள்விக்குட்படுத்தப்பட்டதாக காணப்பட்டது.
இதனைப் போலவே இவ்விவகாரத்தையும் கிடப்பில் போடுவதற்கு அரசாங்கம் எத்தனிக்குமானால் அது தமிழர் தரப்பில் அரசு மீதான ஒரு பாரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
இந்தநிலையில், அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை, இந்த புத்தர் சிலை விவகாரத்தின் பின்னணி, தமிழர் பிரதேசத்தில் அரசின் ஆதிக்கம் மற்றும் தமிழர் பிரதேசத்தின் சமகால அரசியல் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
