ரஷ்யாவின் ஆயுத தொடருந்து தாக்குதலில் நாசம்! பின்னணியில் உக்ரைனிய உளவுத்துறை
உக்ரைனிய இராணுவ உளவுத்துறையின் ஒரு வட்டாரம், ரஷ்யாவின் ஆயுதங்களை ஏற்றிச்சொன்ற தொடருந்து மீதான இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்ததை உறுதிப்படுத்தியள்ளது. இதில் மூன்று ரஷ்ய தேசிய படை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு ரஷ்யாவின் மேற்கு ஓரியோல் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் ஒரு பகுதியில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் விளக்கியுள்ளன.
மற்றொரு தாக்குதலில், ஆயுத தாங்கி வண்டிகள் "அவற்றின் எரிபொருளுடன் அழிக்கப்பட்டன" என்று உக்ரைனின் GUR இராணுவ உளவுத்துறை வட்டாரம் சுட்டிக்காட்டியுள்ளது.
இரசாயன தொழிற்சாலை
இதன்படி உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளில் ரஷ்யப் படைகளுக்கான விநியோக வழிகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைனிய GRU வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் தொடருந்து உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதன் விளைவாக, ரஷ்யர்கள் குறிப்பிடத்தக்க தளவாட சிக்கல்களை சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.
ரஷ்யாவின் பெர்ம் பகுதியில், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையிலிருந்து 1,500 கி.மீ. தொலைவில் வெடிபொருட்களுக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு இரசாயன தொழிற்சாலையின் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவம்
ரஷ்ய இராணுவத்திற்கு விநியோகம் செய்வதற்காக, இங்கிலாந்து மற்றும் உக்ரேனிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மெட்டாஃப்ராக்ஸுக்குச் சொந்தமான குபாக்கா நகரில் உள்ள ஒரு ஆலையே இந்த தாக்குதலின் இலக்காக இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரஷ்யாவின் வடமேற்கில் உள்ள கிரிஷி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உக்ரேனிய ட்ரோன்கள் தீ வைத்து எரித்ததாக ரஷ்ய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர், இந்த சுத்திகரிப்பு நிலையம் ரஷ்யாவின் மிகப்பெரிய பொருளாதார இலக்குகளில் ஒன்றாகும்.
ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை இழக்கும் நோக்கில் உக்ரைன் தொடர்ச்சியான மற்றும் முறையான தாக்குதல்களைத் தொடர்ந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கி, குறித்த தாக்குதல்கள் தொடர்பில் விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
