உக்ரைனுக்கு வழங்கப்படவுள்ள ஆயுதங்கள்: ஜேர்மன் எடுத்துள்ள தீர்மானம்
ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபருமான இமானுவல் மேக்ரான், போலந்து பிரதமரான டொனால்ட் டஸ்க் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது ஜேர்மன் தலைநகர் பெர்லினில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், உக்ரைனுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் முக்கியமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ ஆயுத உற்பத்தி
ரஷ்யா உக்ரைன் போரில், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது, ரஷ்யாவுடன் நேரடியாக மோதுவது போலாகிவிடும் என்று கருதி, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி தயக்கம் காட்டிவந்தது.
ஏற்கனவே, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், உக்ரைனுக்கு உதவுவது தொடர்பில் வெளிப்படையாக பேசி வருகிறார்.
இந்நிலையில், மேக்ரான் மற்றும் போலந்து பிரதமரான டொனால்ட் டஸ்க் உடனான சந்திப்பைத் தொடர்ந்து, ஜேர்மன் சேன்சலரான ஓலாஃப் ஷோல்ஸ், அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், உக்ரைனுக்கு வழங்குவதற்காக, உடனடியாக ஆயுதங்களை வாங்க இருப்பதாக ஷோல்ஸ் தெரிவித்தார்.
உலக ஆயுதங்கள் சந்தையில் அந்த ஆயுதங்களை வாங்க இருப்பதாக தெரிவித்த ஷோல்ஸ், உக்ரைனில் இருக்கும் கூட்டாளர்களுடன் தாங்களும் இராணுவ ஆயுத உற்பத்தியை அதிகரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |