ஐ.நாவின் கீழ் ரஷ்யா, துருக்கி, உக்ரைன் உடன்பாடு - 4 மாதங்களுக்கு நீடிப்பு
உக்ரைனின் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் தற்போதைய நிபந்தனைகளுடன் மேலும் நான்கு மாதங்களுக்கு புதுப்பிக்கப்படுவதாக துருக்கி நேற்று(17) அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை அடுத்து உலகில் ஏற்பட்டுள்ள தானியங்களின் பற்றாக்குறையை அடுத்து உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதிசெய்யும் ஒப்பந்தமொன்று ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்புடன் உக்ரைன், ரஷ்யா, துருக்கி ஆகிய தரப்புகளை உள்ளடக்கி கடந்த ஜூலை மாதத்தில் உருவாக்கப்பட்டது.
4 மாதங்களுக்கு நீடிப்பு
இந்த 2 மாதகால ஒப்பந்தம் இன்றுடன் முடிவடையும் நிலையில் இது மேலும் 120 நாட்களுக்கு புதுப்பிக்கப்படுவதை துருக்கி உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை முதல் கடைபிடிக்கப்பட்ட அதே நிபந்தனைகளின் கீழ்
மேலும் நான்கு மாதங்களுக்கு அதாவது குளிர்கால மாதங்களில் இந்த
ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் எனவும் அதன் பின்னர் புதிய
ஏற்பாடுகளை செய்யலாமெவும் தற்போது உடன்பாடு காணப்பட்டுள்ளது.
