ரஷ்யாவிற்கு பேரிழப்பு : நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்தது உக்ரைன்
ஆக்கிரமிக்கப்பட்ட தமது கிரிமியா தீபகற்பத்தில் உள்ள துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த ரஷ்ய (russia) நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழித்ததாக உக்ரைன்(ukraine) இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை செவஸ்டோபோல் துறைமுகத்தில் கப்பல் தரித்து நின்றவேளை ஏவுகணைத் தாக்குதலில் மூழ்கியது என உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களில் இதுவும் ஒன்று
கலிபர் ஏவுகணைகளை ஏவக்கூடிய ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையால் இயக்கப்படும் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.
எனினும் இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
S-400 வான் பாதுகாப்பு அமைப்பும் அழிப்பு
அத்துடன் 2014 இல் ரஷ்யா சட்டவிரோதமாக இணைத்த கிரீமியா தீபகற்பத்தை பாதுகாக்கும் நான்கு S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளையும் இந்த தாக்குதலில் அழித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
"ரோஸ்டோவ்-ஆன்-டான்(Rostov-on-Don)என்ற இந்த நீர்மூழ்கி கப்பலின் அழிவு கருங்கடலின் உக்ரைனிய பிராந்திய நீரில் ரஷ்ய கடற்படைக்கு பாதுகாப்பான இடம் இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கிறது" என்று கிய்வில் உள்ள படை அதிகாரிகள் சனிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |