ரஷ்ய துருப்புகளின் கோரமுகம்!! அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிப்பு
உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷ்ய தாக்குதலில் சேதம் அடைந்த ஒரு கட்டிட இடிபாடுகளில் இருந்து 44 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கார்கிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாத இறுதியில் போர் தொடுத்த நிலையில் ரஷ்ய படைகள், தொடர்ந்தும் குண்டு மழை பொழிந்து வருகின்றது.
உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் நகரத்தில் கடந்த மார்ச் மாதம் கடுமையான தாக்குதல் நடத்தி பல கட்டிடங்களையும் ரஷ்ய இராணுவம் தகர்த்தது.
இந்நிலையில் கார்கிவ் பகுதியில் ரஷ்ய தாக்குதலில் சேதம் அடைந்த ஒரு கட்டிட இடிபாடுகளில் இருந்து 44 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கார்கிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கார்கிவ் நகர நிர்வாகி தனது சமூக வலைத்தளத்தில், அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக ரஷ்ய படைகள் நடத்திய மற்றுமொரு கொடூரமான போர்க்குற்றம் இது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் கார்கிவ் பகுதியில் எந்த இடத்தில் அந்தக் கட்டிடம் உள்ளது என்பது தொடர்பிலான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
