உக்ரைனின் மிக முக்கியமான தொழில்துறை தாயகத்தின் மீது பாரிய தாக்குதல்!
உக்ரேனியர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த கார்கிவ் நகரில் மிகப்பெரிய தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் மற்றும் போல்ஷிவிக்குகளால் அமைக்கப்பட்ட உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசின் முதல் தலைநகரம் ஆகும்.
பிராந்திய நிர்வாக அலுவலகத்திற்கு வெளியே சுதந்திர சதுக்கத்தில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது உக்ரைனின் மிக முக்கியமான தொழில்துறையின் தாயகமாகும், இதில் ஒரு டாங்க் தொழிற்சாலை மற்றும் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கிவ் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 20 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் மேலும் ஆறு பேர் மீட்கப்பட்டதாகவும் அந்நகரின் அவசர பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் மக்கள் கொல்லப்பட்டார்களா என்பது இது வரை தெளிவாகத் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
Barbaric Russian missile strikes on the central Freedom Square and residential districts of Kharkiv. Putin is unable to break Ukraine down. He commits more war crimes out of fury, murders innocent civilians. The world can and must do more. INCREASE PRESSURE, ISOLATE RUSSIA FULLY! pic.twitter.com/tN4VHF1A9n
— Dmytro Kuleba (@DmytroKuleba) March 1, 2022