உக்ரைனை ஆக்கிரமிக்கும் பிரயத்தனத்தில் ரஷ்யா- இராணுவ உதவி வழங்கியதா சீனா? அதிர்வலையை ஏற்படுத்திய புகைப்படம்!
ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வாகனங்கள் ரஷ்ய எல்லையில் செல்வதாக ஒரு புகைப்படம் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அதன் உண்மை தன்மை குறித்து தெரியவந்துள்ளது.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் கடந்த 24 நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. பல உலக நாடுகளின் கண்டனம் மற்றும் எதிர்ப்பை மீறி ரஷ்யா இத்தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சீனாவின் கனரக இராணுவ வாகனங்கள் ஏவுகணைகள், ஆயுதங்களுடன் ரஷ்ய எல்லைக்குள் வருவதாக ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது உக்ரைனை கைப்பற்றத் துடிக்கும் ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா களம் இறங்கியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
அந்த பதிவில், 200 முதல் 300 வரையிலான இராணுவ ட்ரக்குகள் சீனாவின் Heilongjiang மாகாணம் அருகேயும், ரஷ்யாவின் எல்லையான Suifenhe அருகேயும் இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இதை தற்போது சீனா மறுத்துள்ளது. 'தவறான புகைப்படங்களை வெளியிட்டு, வேண்டுமென்றே சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். சீன படைகள் ரஷ்யாவுக்கு செல்லவில்லை' என, சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புகைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் திகதி சீனாவின் Xinjiang பகுதியில் எடுக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

