தோல்வியில் முடிந்த ஏவுகணை தாக்குதல்...! தக்க பதிலடி கொடுத்த ரஷ்யா
உக்ரைனின் தெற்கு ரோஸ்டோவ் பிராந்தியத்தின் மீது உக்ரைன் ஏவிய 2 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
"உக்ரேனிய ஏவுகணைகளை ரஷ்ய வான் பாதுகாப்பு கருவிகள் கண்டு, வானில் இடைமறித்து தாக்கியது. இதில் கீழே விழுந்த உக்ரைன் நாட்டு முதல் ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் டேகன்ராக் நகரத்தில் விழுந்தது.
சுமார் 2.5 லட்சம் மக்கள் வசிக்கும் டேகன்ராக் நகரின் குடியிருப்புகளை குறிவைத்து முதல் S-200 ஏவுகணை செலுத்தப்பட்டது.
இரண்டாவது ஏவுகணை

இரண்டாவது S-200 ஏவுகணை அசோவ் நகருக்கு அருகே செலுத்தப்பட்டது. இதனை வீழ்த்தியபோது அதன் பாகங்கள், மக்கள் இல்லாத பகுதியில் விழுந்தது", என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் எல்லைப் பகுதிகள், கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதில் இருந்து டிரோன் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை கண்டு வருகின்றன. ஆனால் நேற்றைய சம்பவம் நடைபெறும் வரை ஏவுகணைகளால் குறிவைக்கப்படவில்லை.
"மத்திய டேகன்ராக் பகுதியில் உள்ள செகோவ் கார்டன் உணவகத்திற்கு அருகே இத்தாக்குதலால் 15 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
