உக்ரைனில் சிக்கிக்கொண்ட ரஷ்ய படைகள்- இரட்டிப்பாகும் மிருகத் தனம்!
விளாடிமிர் புட்டினின் படைகள் அதிக அவநம்பிக்கை அடைந்து வருகின்றன எனவும் ரஷ்யர்கள் மிருகத்தனத்தை இரட்டிப்பாக்குவதையும் நாங்கள் காண்கிறோம் என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், 13 நாட்கள் கடந்தும் இன்னும் முன்னேற முடியாமல் ரஷ்யா சிக்கிக்கொண்டுள்ளது. அதனால் அது முன்னேறவில்லை’ எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, உக்ரைனில் நடக்கும் சண்டைக்கு போலந்து ஜெட் விமானங்களை வழங்கக்கூடுமா என்பது குறித்தும் தற்போது விவாதம் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவால் உக்ரைனுக்கு நேரடியாக ஜெட் விமானங்களை வழங்க முடியவில்லை. ரஷ்யா பாவிக்கும் அதே வகையான போர் விமானங்கள், மிக்-29 மற்றும் பிற விமானங்கள் எங்களிடம் இல்லை.
இருதரப்பு அடிப்படையில் போலந்துதான் முடிவு செய்ய வேண்டும் என்பது எங்கள் கருத்து என அவர் மேலும் தெரிவித்தார்.
