உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்..!
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Pakirathan
உக்ரைன் மற்றும் ரஷ்ய யுத்தமானது ஒரு வருடங்கள் கடந்தும் முடிவில்லாமல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
உக்ரைன் பகுதிகளை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், இதற்கு உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல்களை நடத்தி ரஷ்ய படையெடுப்பை தடுத்து வருகின்றது.
இந்தநிலையில், யுக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இழப்புக்கள்
ரஷ்யாவின் குறித்த தாக்குதல்களில் 3 வயது குழந்தை, பெண் ஒருவர் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் 9 மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றும் முழுமையாக சேதமடைந்துள்ளது.
இதேவேளை, ரஷ்யாவின் சில தாக்குதல்களை யுக்ரைன் துருப்புக்கள் முறியடித்து வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி