உக்ரைனின் பாதாள கிடங்கைத் தகர்த்த ரஷ்யா- போர்க்கள பூமியாகும் உக்ரைன்!
உக்ரைனின் இவானோ-பிராங்கிவ்ஸ்க் பகுதியில் உள்ள ஏவுகணை மற்றும் விமான வெடி பொருட்களுக்கான பாதாள கிடங்கை ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் தாக்கி அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 112 குழந்தைகள் உயிரிழந்ததாக உக்ரைன் நாட்டின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து நெருங்கியுள்ளதால் தற்காலிகமாக அசோவ் கடல் வழியை அணுக முடியவில்லை எனவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள சபோரிசியா நகரின் புறநகர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 17 பேர் காயம் அடைந்ததாகவும் அந்நகரத்தின் துணை மேயர் தெரிவித்துள்ளார்.
