ரஷ்யாவின் எண்ணெய் இலக்குதலை தாக்கபோகும் உக்ரைன்! ஜெலென்ஸ்கி பகிரங்கம்
ரஷ்யா உக்ரைனின் முக்கிய நகரங்களை குறிவைத்து தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதற்கு பதிலடியாக, ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா சமீப நாட்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் ரஷ்யப் படைகள் தலைநகர் கீவில் ட்னீப்பர் ஆற்றைக் கடக்கும் இரண்டு முக்கிய பாலங்களையும் தாக்கியுள்ளன.
புடினின் புதிய போர் கோட்பாடு
இந்நிலையில் இது குறித்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட வொலோடிமிர் ஸெலென்ஸ்கி,

“ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் புதிய போர் கோட்பாடு தொடர்பான தகவல்களை உக்ரைன் உளவுத்துறை கண்டறிந்துள்ளது.
உள்கட்டமைப்பு, தளவாடங்கள், சாலைகள், பாடசாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றை தாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதை காட்டும் ஆவணங்களை நாங்கள் பார்த்துள்ளோம்.
இதன் மூலம் மக்கள் தலைநகரையும் பிற நகரங்களையும் விட்டு வெளியேறுமாறு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிகிறது.
இதற்கு உக்ரைன் பதிலடி கொடுக்கும். முதலில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைப்போம். ஏனெனில் அவை ரஷ்யாவுக்கு இந்தப் போருக்கான நிதியை வழங்குகின்றன.
ஆனால், ரஷ்யாவைப் போன்று பொதுமக்கள் இலக்குகள் மீது நாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம்,” என ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |