உக்ரைன் - அமெரிக்க மோதலில் எதிர்பாரா திருப்பம்! மனம் மாறிய ஜெலென்ஸ்கி
அமெரிக்காவுடன் (USA) கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட இன்னமும் உக்ரைன் (Ukraine) தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
லண்டனில் (London) உச்சி மாநாடொன்றுக்கு கலந்து கொண்ட பிறகு பிரித்தானிய ஊடகங்கள் மூலம் அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் (Donald Trump) தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஓவல் அலுவலக மோதலுக்குப் பிறகு ஜெலென்ஸ்கியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடும் வாக்குவாதம்
கடந்த 28 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்போது, 40 நிமிடத்திற்கும் மேலாக இருவரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வெளியிட்ட கருத்து ஒன்றினால் ட்ரம்பிற்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம்
அதனை தொடர்ந்து, போரை முடிவுக்கு கொண்டு வர நடத்திய பேச்சு வார்த்தையும் பாரிய கருத்து மோதலில் முடிவடைந்ததுடன், உக்ரைனின் அமெரிக்காவுடன் கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தமும் தோல்வியடைந்தது.
இதேவேளை, ஜெலென்ஸ்கி மற்றும் அவருடன் வந்த உக்ரேனிய தூதுக்குழு வெள்ளை மாளிகையை விட்டு பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.
இவ்வாறானதொரு பின்னணியில், வெள்ளை மாளிகை சர்ச்சைக்குப் பிறகு ட்ரம்ப் உறவை சரிசெய்ய முடியும் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளதோடு, அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் இன்னமும் தாயராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
