அமெரிக்காவிற்கு உக்ரைனின் அழுத்தம்: ரஷ்ய எண்ணெய் தடைகள் விரிவாக்கம்
ரஷ்யாவின் (Russia) அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா (United States) பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது அமெரிக்கா கடந்த 22 ஆம் திகதி பொருளாதார தடை விதித்தது.
இதன்மூலம் இந்நிறுவனங்களுடன் அமெரிக்காவைச் சோ்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபா்கள் வணிகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
ரஷ்ய நிறுவனங்கள்
அமெரிக்கா அல்லாத நிறுவனங்களும் மேற்கூறிய ரஷ்ய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்களுடன் வணிகம் மேற்கொண்டால் அவற்றுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு அமெரிக்கா முடிவெடுத்திருந்தது.

இந்தநிலையில், இந்த நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வணிகத்தை நவம்பர் 21 ஆம் திகதிக்குள் நிறுத்திவிட வேண்டும் என அமெரிக்க நிதியமைச்சகம் தெரிவித்தது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வருவதால் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள்
இந்தநிலையில் ஸெலென்ஸ்கி, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ரஷ்யாவின் இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டுமில்லாது அந்த நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், மற்ற எண்ணெய் நிறுவனங்களுக்கும் நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்