ரஷ்யாவுக்கு மற்றுமொரு அடி -முதன் முதல் களமிறக்கிய நவீன தாங்கியை தாக்கி அழித்த உக்ரைன் படை(photos)
Russo-Ukrainian War
By Jaso
உக்ரைன் மீதான போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா முதன்முறையாக போரில் களமிறக்கிய அதிநவீன தாங்கியை உக்ரைன் படைகள் தாக்கி அழித்துள்ளன.
4 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய T-90M என்னும் அந்த ரஷ்ய தாங்கியின் வெளிப்பக்கம் எஃகினால் உருவாக்கப்பட்டது. அத்துடன், தன்னை வேறு போர் வாகனங்கள் தாக்குவதற்காக லேசர் ஒளிக்கற்றை மூலம் குறிவைத்தால், உடனே, தானாகவே புகை வெளியிடும் குண்டுகளை வீசும் அதிநவீன போர் வாகனம் .
அந்த போர் வாகனம் இப்போதுதான் முதன்முறையாக போரில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அந்த அதிநவீன போர் வாகனத்தையே உக்ரைன் படைகள் தாக்கி அழித்துவிட்டன.
வடகிழக்கு உக்ரைனிலுள்ள Kharkiv பகுதியில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி