புடின் மீது ஜெலென்ஸ்கி முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு
போர் நிறுத்தம் பற்றிய தோற்றத்தை உருவாக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) முயற்சிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தி வைப்பதாக புடின் நேற்று (19) அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போரின் பாதை
மேலும் தெரிவித்த ஜெலென்ஸ்கி, “போர் நிறுத்தம் பற்றிய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார் புடின்.
எல்லை நகரங்களான குர்ச்க் மற்றும் பெல்கொரேட் போன்ற மாகாணங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றது.
ஈஸ்டர் நாளில், தங்கள் நாட்டிற்கு அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையை கைவிட வேண்டாம், 1152 நாட்களாக அவர்களுடன் பயணித்து வரும் கடினமான போரின் பாதையை கடக்க விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும்.
உக்ரைனியர்களின் உறுதி
உக்ரைன் ஒரு போதும் நம்பிக்கையை இழக்காது, நாம் எதைப் பாதுகாக்கிறோம் என்பது நமக்கு தெரியும், யாருக்காக எதற்காகப் போராடுகிறோம் என்பதும் நமக்கு தெரியும்.
வாழ்க்கை ஒரு நாள் வரும், அந்த அமைதி நாள் உக்ரைனின் நாள், அந்த நாள் ஒரு நூற்றாண்டு நீடிக்கும்.
நாம் மீண்டும் ஒன்று கூட முடியும், நம்பிக்கையை இழக்க வேண்டாம் நமது தாய்நாடு விடுவிக்கப்படும், வெற்றியின் நாள் வரும் இந்தப் போரில் உக்ரைனியர்களின் உறுதி மற்றும் தியாகம் தொடர்ந்து உலகின் கவனத்தை ஈர்க்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
