ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடு

Human Rights Council United Human Rights United Nations Jaffna SL Protest
By Thulsi Jun 26, 2025 12:21 AM GMT
Report

புதிய இணைப்பு

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்று பிற்பகல் 5 மணியளவில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடு | Un Human Rights Chief Volker T Rk To Visit Jaffna

நான்காம் இணைப்பு

பலத்த பாதுகாப்புடன் செம்மணியை வந்தடைந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சற்றுமுன் செம்மணி மனிதப் புதைகுழிக்கு வருகை தந்தார்.


மூன்றாம் இணைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) சற்று முன்னர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தை வந்தடைந்திருக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாம் இணைப்பு 

உணர்வெழுச்சியுடன் வெடித்துள்ள போராட்டம் - யாழ். வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் தொனிப்பொருளில் சர்வதேச நீதி கோரி நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் இரவு பகலாக நடைபெற்று மூன்றாவது நாளான இன்று மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைய இன்று காலையில் அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்தும் அணையா விளக்குப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

செம்மணி போராட்டத்தில் பதற்றம் : விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம்

செம்மணி போராட்டத்தில் பதற்றம் : விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம்

அரசியல் கட்சிகள்

இப்போராட்டத்தில் மதத் தலைவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடு | Un Human Rights Chief Volker T Rk To Visit Jaffna

இறுதி நாள் போராட்டமாக நடைபெறுகிற இன்றைய போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து பெருமளவிலானோர் கலந்து கொளண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.

ஐ.நா ஆணையாளர்

இதன் போது ஐ.நா ஆணையாளர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடு | Un Human Rights Chief Volker T Rk To Visit Jaffna

மேலும் அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று போராட்டத்தின் மகஜரொன்றும் ஆணையாளரிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆனாலும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஆணையாளர் நேரடியாக வருகிறாரா இல்லையா என்பது தொடர்பாக உறுதியாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

முதலாம் இணைப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

இதன்போது, அவர் செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதுடன், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களையும் சந்திப்பார் என்று அறியவருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் 4 நாள்கள் பயணமாக இலங்கைக்கு (Srilanka) வருகை தந்துள்ளார்.

மூடி மறைக்கப்படும் செம்மணி விவகாரம் - வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்

மூடி மறைக்கப்படும் செம்மணி விவகாரம் - வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்

யாழ். செம்மணி - சித்துப்பாத்தி

நேற்றைய தினம் கொழும்பில் (Colombo) பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடிய அவர் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் வருகின்றார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடு | Un Human Rights Chief Volker T Rk To Visit Jaffna

தரைவழியாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் அவர், யாழ். செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவார். அத்துடன், போராட்டக்காரர்களையும் அவர் சந்தித்துப் பேசுவார் என்று அறியவருகின்றது.

இதன் பின்னர், வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கின் 5 மாவட்டங்களின் அரச அதிபர்களை ஆளுநர் செயலகத்தில் அவர் சந்தித்துப் பேசவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

தெரிவு செய்யப்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரிய அணையா விளக்கு போராட்டம்... வலுக்கும் ஆதரவு

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரிய அணையா விளக்கு போராட்டம்... வலுக்கும் ஆதரவு

தமிழ் பேசும் அரசியல் கட்சி

இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய தரப்புக்களை இரவு உணவுடன் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார் என்றும் அறியவருகின்றது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடு | Un Human Rights Chief Volker T Rk To Visit Jaffna

எனினும், ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளரின் யாழ்ப்பாணம் வருகைக்கான நிகழ்ச்சி நிரல் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதுடன், அவரின் வருகைக்கான முழு ஏற்பாடுகளையும் ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி பணிமனையே மேற்கொண்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் இன்றைய தினம் கண்டி, திருகோணமலை பயணத்தை முடித்துக் கொண்டே யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.

முன்னதாக, ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணி மனிதப் புதைகுழிக்கும் நாட்டில் பயணிக்க விரும்பும் சகல பகுதிகளுக்கும் செல்வதற்கு தாம் எந்தவிதமான தடைகளையும் விதிக்கப்போவதில்லை என்று அநுர அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணை வேண்டும் : ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் வலியுறுத்து

சர்வதேச விசாரணை வேண்டும் : ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் வலியுறுத்து

புதைக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்ய முயலும் சாணக்கியன் - விரட்டி அடித்த பொதுமக்கள்

புதைக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்ய முயலும் சாணக்கியன் - விரட்டி அடித்த பொதுமக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020