ரணில் தலைமையிலான அரசால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை : வெளிவந்த கடும் எச்சரிக்கை
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் இலங்கை வேகமாக பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதி ஆசிய பணிப்பாளர் மீனாக்சி கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
”இலங்கை தொடர்ந்தும் தவறான நிர்வாகம் மற்றும் பொறுப்புக்கூறல் குறைபாடு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் சிரமத்திற்குள்ளாகி வருவகிறது.
கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதில்
சமூக நீதி மற்றும் உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கு பதிலாக, கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதிலும், மனித உரிமைகள் மீதான சர்வதேச கவனத்தை மட்டுப்படுத்துவதிலும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது” என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பின்னோக்கி செல்லும் இலங்கை
அத்துடன் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |