துபாயில் கைது செய்யப்பட்ட இலங்கை பாதாள உலகக்குழு உறுப்பினர் திடீர் விடுதலை!
துபாயில் கைது செய்யப்பட்ட இந்நாட்டு குற்றக்குழு உறுப்பினரான ரஞ்சித் குமார எனப்படும் கொண்ட ரஞ்சி, அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்றபோது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் துபாய் காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
அதனையடுத்து, அந்நாட்டு காவல்துறையினர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் சமீர மனஹரவை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பிலும் கொண்ட ரஞ்சி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் அவருக்கு கோல்டன் விசாவை வழங்கியுள்ள நிலையில், அத்தகைய விசா வைத்திருக்கும் ஒருவர் அந்த நாட்டில் மிகவும் மதிக்கப்படுகிறார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, துபாயில் கைது செய்யப்பட்டு அண்மையில் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கொண்ட ரஞ்சியின் நெருங்கிய நண்பரான சூட்டி மல்லி எனப்படுபவரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க களனி குற்றப் பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் சமீர மனஹர, போதைப்பொருள் கடத்தல் தகராறில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |