இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலக தலைவர்கள்: அம்பலமாகும் அரசியல்வாதிகள் தொடர்புகள்!
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குற்றவாளிகளான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்தா, பாணதுரே நிலங்க, பெகோ சமன் மற்றும் தெம்பிளி லஹிரு ஆகியோரை நாளை நாட்டிற்கு அழைத்து வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களை ஏற்றிவரும் விமானம் நாளை (30) இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு புறப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
போலி கடவுச்சீட்டுக்கள்
இவர்களில் மூவர் போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி இந்தோனேஷியாவில் தங்கியிருந்தது தெரியவந்த நிலையில், இலங்கைத் தூதரகம் அவர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்களை வழங்கி அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது இந்தோனேஷியா காவல்துறையினர் கைப்பற்றிய தொலைபேசிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களும் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளன.
அரசியல்வாதிகள் குறித்து தகவல்
அவற்றின் மூலம் பல அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரின் தொடர்புகள் வெளிப்படும் வாய்ப்பு இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களை 10 இந்தோனேஷியா காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

