சீனாவால் தப்பிக்குமா இலங்கை..! ஜெனிவா அமர்வால் ஒன்றுபட்ட தமிழர் தரப்பு

Human Rights Council Sri Lankan Tamils Geneva Government Of Sri Lanka Sri Lanka Final War
By Vanan Aug 31, 2022 02:27 PM GMT
Report

கடந்த பதின் மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் இதற்கு கடுமையான ஒரு தீர்மானம் இலங்கையில் நிறைவேற்றபட வேண்டுமெனவும் தமிழ் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் கடந்த பதின் மூன்று வருடங்களாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிவிவகார அமைச்சர்களுக்கு கடிதமொன்றின் மூலம் தமிழ் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நீதி வழங்குவதில் தொடர்ந்தும் தாமதாக செயற்படுவது குறித்தும் அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


ஆறு தமிழ்தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமயத் தலைவர்கள், சமூக அமைப்புகள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுக்கு இதற்கான கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் முன்னெடுப்பில் இவ்விடயம் சாத்தியமாகியது.

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த கோரிக்கை

சீனாவால் தப்பிக்குமா இலங்கை..! ஜெனிவா அமர்வால் ஒன்றுபட்ட தமிழர் தரப்பு | Unhrc 51St Session Sl Core Group Tamil Side Letter

இக் கோரிக்கையில் பிரதானமாக சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்த ஐ.நா பாதுகாப்புச் சபையை தூண்டுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட வந்த பிரேரணைகளை இலங்கை நடைமுறைப்படுத்த தவறி உள்ளமையால், மேலும் கால அவகாசங்கள் வழங்குவது அர்த்தமற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையில் சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதை தடுக்கும் என்ற வாதம் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியா என்ற உலகின் பல தரப்பினரும் சந்தேகத்தை எழுப்புவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக்கள் ஆதாரமற்றவை என்றும், இலங்கையை விட சீனாவோடு மிக நெருக்கமாக இருந்த சூடான் நாட்டை ஐநா பாதுகாப்புச் சபையின் ஊடாக மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்திய பொழுது அதற்கு எதிராக எந்த நாடும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த வில்லை என்பதும், அதே போன்று வடகொரிய நாட்டை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்காக ஐநா பாதுகாப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதையும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

பாதுகாப்புச் சபையை தூண்டுவதற்கான பிரேரணை

சீனாவால் தப்பிக்குமா இலங்கை..! ஜெனிவா அமர்வால் ஒன்றுபட்ட தமிழர் தரப்பு | Unhrc 51St Session Sl Core Group Tamil Side Letter

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியக் குற்றங்களுக்காக நீண்டகாலமாக தமிழ் மக்கள் கோரி நிற்கும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு மனித உரிமை பேரவை மேற்குறிப்பிட்ட உண்மைகளின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதற்கு பாதுகாப்புச் சபையை தூண்டுவதற்கான பிரேரணையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு இலங்கை இணங்குவது குறித்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடந்த அநியாயமான குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை அடைவதற்கான வலுவான தீர்மானத்தை பெறுவது குறித்து பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டுமென தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் கடிதத்தின் பிரதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு மின்னஞ்சல் மூலமாக கடந்த 28ஆம் திகதி அனுப்பப்பட்டதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும், கொழும்பில் உள்ள வெளிநாட்டு துதரகங்களில் தமது உறுப்பினர் ஒருவர் இன்று கையளிப்பு செய்ததாகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலர் திருமதி ஆனந்தநடராஜா லீலாவதி உறுதிசெய்தார்.

கடிதத்தின் முழுமையைான பிரதி இணைப்பு



GalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், கொழும்பு 6

27 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், நீர்கொழும்பு

27 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
கண்ணீர் அஞ்சலி

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024