மொத்தமாக ஸ்தம்பித்த அமெரிக்கா : பைடன் பதவி இழக்கும் நிலை
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முடிவு 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் என்று துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 90 வருடங்களில் இல்லாத வகையில் மூன்று பெரும் கார் உற்பத்தி நிறுவன தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முழு ஆதரவை அளித்துள்ளார்.
ஜோ பைடன் 2024 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ள, வேலை நிறுத்தம் தொடர்ந்தால், அது அமெரிக்க பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி, பைடனின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் என்று துறை சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தம்
ஜெனரல் மோட்டர்ஸ், ஃபோர்ட்(ford)மற்றும் ஸ்டெல்லான்டிஸ் ஆகிய நிறுவனங்கள், கடந்த 90 வருடங்களாக அமெரிக்காவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களாக கோலோச்சி வருகின்றன.
இதில், ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம் முன்பு கிரிஸ்லராக இருந்து, பின்னர் fiat மற்றும் பி.எஸ்.ஏ ஆகிய ஐரோப்பிய நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டு, புதிய பெயரில் இயங்கி வருகிறது.
கடந்த 90 வருடங்களில் இல்லாத வகையில், முதல் முறையாக இந்த மூன்று நிறுவன தொழிலாளர்கள் இணைந்து வேலை நிறுத்ததில் ஈடுப்பட்டுள்ளனர்.
மிக்சிகன், மிஸ்ஸோரி, ஒஹையோ மாகாணங்களில் அமைந்துள்ள மூன்று தொழிற்சாலைகளைச் சேர்ந்த 12,700 தொழிலாளர்கள் ஒரே சமயத்தில் வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.
ஐக்கிய தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த இவர்கள், மூன்று தொழிற்சாலைகளின் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 36 சதவீத சம்பள உயர்வு கோரி அவர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால் முப்பெரும் நிறுவனங்கள் 17 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தி தர முன் வந்துள்ளதால், பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது.
ஃபோர்ட் ப்ரோன்கோ, ஜீப் ரேங்கலர், செவர்லட் கொலராடோ உள்ளிட்ட பல்வேறு பிரபல கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
10,000 கோடி டொலர் கூடுதல் செலவு
தொழிலாளர்கள் கோரும் சம்பள உயர்வை அளித்தாலும், இந்த மூன்று நிறுவனங்களின் லாபம் பெரிய அளவுக்கு குறையாது என்று தொழிற்சங்க தலைவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் ஆண்டுக்கு 10,000 கோடி டொலர் கூடுதல் செலவு ஆகும் என்பதால், இது சாத்தியமில்லை என்று நிறுவன நிர்வாகிகள் மறுக்கின்றனர்.