அரபு நாட்டிற்கு பணிக்காக சென்ற தமிழ்ப் பெண் மாயம் - கதறும் பிள்ளைகள்!

Missing Persons Kilinochchi Sri Lanka United Arab Emirates
By Kalaimathy Mar 07, 2023 10:54 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற பெண் ஒருவர் மாயமாகியுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

காணாமல்போயுள்ள பெண்ணின் கணவனும் இரு பிள்ளைகளும் இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்காக வந்த போதே ஊடகத்திற்கு இந்த தகவலை வழங்கியுள்ளனர்.

39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே அரபு நாட்டிற்கு வீட்டுப் பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளார். இவர் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை பிரிவில் இயக்கச்சி, கிநொச்சி என்னும் முகவரியைக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிற்கு சென்ற பெண் மாயம்

அரபு நாட்டிற்கு பணிக்காக சென்ற தமிழ்ப் பெண் மாயம் - கதறும் பிள்ளைகள்! | United Arab Emirate House Maid Missing Sri Lanka

இவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் அவரது கணவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டுப்பணிக்காக மனைவி அரபு நாட்டிற்கு சென்றிருந்தார். கடந்த இரண்டு மாதங்களாக அங்கிருந்து பணம் அனுப்பியிருந்தார். எனினும் இந்த மாதம் சம்பளம் அனுப்பவில்லை.

அதனையடுத்து மனைவியுடன் தொடர்புகொள்ள முயற்சித்த போது, தொடர்பு கிடைக்கவில்லை எனவும், அதனையடுத்து அவர் பணிக்காகச் சென்றிருந்த வீட்டு உரிமையாளருக்கு தொடர்பை ஏற்படுத்தி விசாரித்த போது, அவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

முரணான பதிலளித்த உரிமையாளர்கள்

அரபு நாட்டிற்கு பணிக்காக சென்ற தமிழ்ப் பெண் மாயம் - கதறும் பிள்ளைகள்! | United Arab Emirate House Maid Missing Sri Lanka

அவர்களின் பதிலில் முரண்பாட்டுத்தன்மை இருக்கின்றது. ஏனெில் வீட்டு உரிமையாளரான பெண், எனது மனைவி, வீட்டின் முன்பக்க வாயிலாலேயே தப்பிச் சென்றார் எனத் தெரிவித்திருந்த நிலையில், அவரது கணவன் வீட்டு மாடியிலிருந்த ஏணியால் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

அவர்களின் முரண்பாடான பதிலாலேயே எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மனைவி தொலை பேசியில் உரையாடும் போது, பணிக்கு சென்றுள்ள வீட்டு உரிமையாளர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மனைவியின் தொலை பேசி மற்றும் கடவுச்சீட்டு என்பவற்றை பறித்து வைத்துள்ளதாகவும் அதனைத் தருமாறு கேட்டு முரண்பட்டதாகவும் தெரிவித்தார்.

மனைவியை மீட்டுத் தாருங்கள்

அரபு நாட்டிற்கு பணிக்காக சென்ற தமிழ்ப் பெண் மாயம் - கதறும் பிள்ளைகள்! | United Arab Emirate House Maid Missing Sri Lanka

அதனையடுத்து 4ஆம் திகதி முதல் மனைவியுடன் எந்தத் தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை. அதனையடுத்தே வீட்டு உரிமையாளர்களுடன் அரபு மொழியில் உரையாடிய போதே, மனைவி காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனது மனைவி தற்போது உயிருடன் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை. வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்டு இறந்து விட்டாரா என்பது கூடத் தெரியவில்லை.

ஆகவே அரசியல் தலைவர்களும், நாட்டின் அதிபரும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு எனது மனைவியை, மீட்டுத்தர வேண்டும். அவருக்கு என்ன நடந்தது, உயிருடன் இருகக்கின்றாரா இல்லையா என்பது தொடர்பில் எமக்கு அறியத்தர வேண்டும்.

கணவனின் வேண்டுகோள்

அரபு நாட்டிற்கு பணிக்காக சென்ற தமிழ்ப் பெண் மாயம் - கதறும் பிள்ளைகள்! | United Arab Emirate House Maid Missing Sri Lanka

மனைவி காணாமல் போயுள்ளமை தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்ய சென்றிருந்த போது, இவ்வாறு வீட்டுப் பணிக்காக செல்வோர் 2 வருடங்களைக் கடந்திருந்தால் மட்டுமே நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் பணிக்காக அனுப்பிய முகவர்களே அதற்கு பொறுப்பு எனத் தெரிவித்துள்ளனர்.

எமது வறுமை காரணமாக மனைவி வீட்டுப் பணிக்காக வெளிநாடு சென்றிருந்தார். நானும் இங்கு கூலித் தொழில் தான் செய்து வருகின்றேன். தொழில்புரிவதற்காக வெளிநாடு சென்ற மனைவி தற்போது காணாமல் போயுள்ளார்.

நானும் எனது 2 பிள்ளைகளும் மனைவியைக் காணாது தவித்து நிற்கின்றோம். எனவே அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நாட்டின் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடனடி நடவடிக்க மேற்கொண்டு எனது மனைவியை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025