தமிழினப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறாத சிறிலங்கா- விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!
பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற பொங்கல் விழாவில் உரையாற்றிய அரசியல் பிரபலங்கள் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட குரூரங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்காக அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பிரித்தானிய தமிழ்சமூக அமைப்பினரால் நடத்தப்பட்ட இந்தநிகழ்வில் ஆளும் கட்சியான கென்சவேட்டிவ் கட்சி எதிர்க்கட்சிகளான தொழிற்கட்சி மற்றும் தாராளவாத ஜனநாயக்கட்சி ஆகிய எதிர்கட்சிகளும் பங்கெடுத்திருந்தன.
தமிழர்கள் மீது ஒரு இனப்படுகொலை நடத்தப்பட்டிருப்பதால் பிரித்தானிய அரசியல்வாதிகள் மனித உரிமைகளுக்காகப்போராட வேண்டும் எனவும் சிறிலங்காவின் அதிகாரிகளை இலக்கு வைத்து மெக்னிட்ஸ்கி தடைகளை விதித்து சிறிலங்காவுக்கு கடுமையான செய்திகளை சொல்ல வேண்டிய நேரமும் இதுவென லிப்டெம் கட்சி தலைவர் எட் டேவி குறிப்பிட்டார்.
இதேவேளை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர், எலியட் கோல்பர்ன் சிறிலங்கா அரசாங்கத்தை பொறுப்புக்கூற வைக்கவேணடும் என வலியுறுத்தியுள்ளார்.
இதன் போது, தொழிற்கட்சியின் ஈழத்தமிழ்மக்கள் தொடர்பான நிலைப்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கபடுமென்ற உறுதிமொழியை நிழல் வெளியுறவு அமைச்சர் டேவிட் லமி வழங்கினார்.
இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைக்கும் போர்க்குற்றங்கள், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் இன்று வரை சிறிலங்கா தரப்பில் பொறுப்புக் கூறப்படவில்லையென்பதால் நீதிக்காக தொழிற்கட்சி எப்போதும் தமிழர்களுடன் துணைநிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பாவி, மக்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டுமென சிறிலங்கா அரசாங்கததை கோரியதோடு, சிறிலங்காவின் போர்க் குற்றவாளிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் இலஙகையில் ராஜபக்சக்களின் மீள்வருகையானது அந்த தீவின் எதிர்காலத்திற்கு பாதகமெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.