ஜெனிவா நகர்வுகள் குறித்து இலங்கை தூதரகம் ஊடாக அவதானிப்பு : அலி சப்ரி தகவல்
இலங்கையின் சமகால மனித உரிமைகள் முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளில் அடைந்துள்ள இலக்குகள் தொடர்பில் முழுமையான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
55 ஆவது கூட்டத்தொடர்
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தொடரின் போது இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்கள் தொடர்பில் மார்ச் மாதம் 4 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.
ஜெனிவா நகர்வுகள் குறித்து
இதன் போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல விளக்கமளிப்பு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் எவ்வாறாயினும் ஜெனிவா நகர்வுகள் குறித்து அங்குள்ள இலங்கை தூதரகம் ஊடாக அவதானித்து வருவதாக“ அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |