தேசிய மக்கள் சக்திக்கு நளின் விடுத்துள்ள கோரிக்கை
ஐக்கிய மக்கள் சக்தியினால் விவதத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திகதிகளை உடனடியாக பொருளாதார குழுவிற்கு அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தேசிய மக்கள் சக்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayathissa)விற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலைமைத்துவ விவாதம்
பொருளாதார குழு விவாதத்திற்கு அழைக்கப்பட்ட போதிலும், தலைமைத்துவ விவாதத்திற்கான பிரேரணையை தமது கட்சி எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்விரு விவாதங்களில் முதலில் பொருளாதார விவாதம், இரண்டாவதாக தலைமைத்துவ விவாதம் என்ற நிலைப்பாடு அப்படியே இருப்பதாகவும், பொருளாதார குழு விவாதத்திற்கான திகதியை உடனடியாக அறிவிக்குமாறும் உரிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 4 நாட்கள் முன்
