அரசாங்கத்தில் எந்த ஒரு பதவியையும் ஏற்கப்போவதில்லை! சஜித் அதிரடி
தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டார்கள்என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவின் மூலமே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
For SJB the struggle continues to be about ending the “Rajapaksa rule”. We strongly believe it is the first step if we want to rebuild Sri Lanka. Under this regime no SJB member will hold any positions.
— Sajith Premadasa (@sajithpremadasa) May 17, 2022
ராஜபக்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். .
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்து அரசாங்கத்தில் அமர முயற்சித்தால், அரசாங்கத்திற்கு வழங்கப்படும் அனைத்து உதவிகளிலிருந்தும் அவர்கள் விலகிக்கொள்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
But we will support any positive steps by #GoSL for the sake of stability. If there is any attempt by members of the Government to bribe SJB members with money or positions we will withdraw any and all support.
— Sajith Premadasa (@sajithpremadasa) May 17, 2022
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
