புலம்புவதில் அதிக நேரத்தை செலவிடுகிறார் ட்ரம்ப்- பைடன் காட்டம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வரும் 20-ம் திகதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். இந்தநிலையில் ஜனாதிபதி டிரம்ப் தனது பதவிக்குரிய வேலையைச் செய்வதை விட புலம்புவதிலும், முறைப்பாடு செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுவதாக ஜோ பைடன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜோர்ஜியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு போட்டியிடும் 2 ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜோ பைடன் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் ஜனாதிபதி டிரம்ப் தனது பதவிக்குரிய வேலையைச் செய்வதை விட புலம்புவதிலும, புகார் செய்வதிலும் அதிக நேரத்தை செலவிடுவதாக காட்டமாக தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், டிரம்ப் ஏன் இன்னும் ஜனாதிபதி பதவியை விரும்புகிறார் என்று எனக்கு தெரியவில்லை.
அவர் வேலை செய்ய விரும்பவில்லை. ஏதாவது ஒரு பிரச்சினை குறித்து புலம்புவதிலும், புகார் கூறுவதிலும் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார் என்றார்.
இதற்கிடையில் ஜனாதிபதி பதவியை தக்கவைக்க நரகத்தை போல போராடுவேன் என கூறியுள்ள டிரம்ப், ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்வில் சபை உறுப்பினர்களின் வாக்கெடுப்பை உறுதிப்படுத்த இந்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது, குடியரசு கட்சி எம்.பி.க்கள் அதனை நிராகரிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.