பதவியை இழந்தாரா ட்ரம்ப்? அதிகாரபூர்வ இணையத்தள பதிவால் எழுந்தது சர்ச்சை
america
united
of
states
donaldtrump
By Vasanth
அமெரிக்க அரசியலில் பரபரப்பு காட்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ட்ரம்பின் பதவிக்காலம் நிறைவடைந்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, "டொனால்ட் ஜே. ட்ரம்பின் பதவிக்காலம் 2021-01-11 19:49:00 முடிவடைந்தது," என்று கூறும் செய்தி அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிகாரபூர்வ வலைத்தளத்தின் சுயசரிதை பிரிவில் இருந்துள்ளது.
இந்த சம்பவம் ஹேக்கிங் காரணமாக நடைபெற்றதா அல்லது தவறுதலாக நடைபெற்றதா என்ற கேள்விக்கு வெளியுறவுத்துறை உடனடியாக பதிலளிக்கவில்லை.
சில அமெரிக்க ஊடகங்கள் அதிருப்தி அடைந்த வெளியுறவுத்துறை ஊழியர் ஒருவர் காரணமாக இந்த தவறு நடந்திருப்பதாக கூறியுள்ளன.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி