ஆர்ப்பாட்ட காரர்களுக்கு அதிபர் ட்ரம்ப் விடுத்துள்ள அறிவிப்பு
Death
Protest
Donald Trump
United States of America
By Vasanth
அமெரிக்க நாடாளுமன்றத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வன்முறை வேண்டாம் என அதிபர் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில், அமெரிக்க நாடாளுமன்ற பகுதியில் இருப்பவர்களை அமைதியை நிலைநாட்டும்படி கேட்டுக்கொள்கிறேன். வன்முறை வேண்டாம்.
நியாயம் வைத்துக்கொள்ளுங்கள், நாம் சட்டம் ஒழுங்கை மதிக்கும் கட்சியினர். சட்டத்தையும், நமது நீல நிற உடையில் உள்ள சிறந்த ஆண்கள் மற்றும் பெண்களை மதித்து நடவுங்கள் என பதிவிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி