ஹமாஸ் மற்றும் புடினின் குறிக்கோள்: கடுமையாக விமர்சிக்கும் பைடன்
ஹமாஸ் அமைப்பும், ரஷ்ய அதிபர் புடினும் அருகில் உள்ள ஜனநாயக நாடுகளை அழித்தொழிப்பதே வேலையாக வைத்துள்ளனர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவத்தில் நாட்டு மக்களுக்கு இன்று(20)உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த உரையில் ஹமாஸ் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இரண்டும் தீவிரவாதம் மற்றும் கொடுங்கோன்மையின் அச்சுறுத்தல் கொண்டவை.இரண்டுமே அண்டை நாடுகளின் ஜனநாயகத்தை அழித்தொழிப்பதையே இலக்காக வைத்துள்ளதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் எதிர்காலம்
இதனால் ஏற்படும் மோதல்கள் மற்றும் குழப்பங்கள் உலகின் பிற பகுதிகளுக்கு பரவி அதன் பாதிப்புகள் அதிகரிக்க வைக்கும் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு அவர் உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் அமெரிக்கா அதிகமான நிதியுதவி வழங்க வேண்டும், இந்த நிதியுதவி அமெரிக்காவின் எதிர்கால நலனுக்கான முதலீடு என்றும் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்காவின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.பல ஆண்டுகளுக்கு வருங்கால அமெரிக்க சந்ததிகள் இதன் மூலம் பலன் பெறுவார்கள், நமது நட்புறவுகளே நமக்கான பாதுகாப்பு என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.