ஹமாஸ் பயன்படுத்திய வடகொரிய ஆயுதங்கள்: அம்பலப்படுத்திய தென்கொரியா
இஸ்ரேல் மீது கடந்த 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் வடகொரியாவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த 14 நாட்களாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையேயான கடும் யுத்தம் காரணமாக இருதரப்பிலும் 4000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பாரியளவிலான மக்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குலுக்கு வடகொரியாவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளதை தொடர்ந்து வடகெரியா அதனை மறுத்துள்ளது.
அறிக்கை
மேலும், காசாவின் அல்-அக்லி மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டு 500 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் காரணமில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அரசு செய்த ஆய்வின்படி காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பாகாது என்பது தெரியவந்துள்ளது.
கிடைத்த செய்திகள், உளவுத்துறை அறிக்கைகள், ஏவுகணையின் செயல்பாடு, புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் நாங்கள் இதனை உறுதி செய்துள்ளோம்” என கூறப்பட்டுள்ளது.