அமெரிக்காவிடமிருந்து அதிக போர் உதவிகளைப் பெற்ற முதல் நாடு
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவிடமிருந்து அதிக போர் உதவிகளைப் பெற்ற நாடு இஸ்ரேல் என தெரியவந்துள்ளது.
அந்த நேரத்தில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு சுமார் 158 பில்லியன் டாலர்களை இருதரப்பு மற்றும் இராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2019 முதல் 2028 வரை 10 ஆண்டுகளுக்கு 38 பில்லியன் டாலர் இராணுவ உதவியை இஸ்ரேல் பெறும்.
இஸ்ரேல் யுத்தம்
அதன்படி இந்த வருடத்திற்கு 3.8 பில்லியன் டொலர்கள் இஸ்ரேலுக்கு வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கடந்த 7 ஆம் திகதியில் இருந்து தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்குமான யுத்தத்தில் அமெரிக்கா இஸ்ரேலிற்கு பாரிய பங்களிப்புகளை வழங்கிவருகிறது.
அத்தோடு, 2022 இல் ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், அமெரிக்கா உக்ரைனுக்கு மனிதாபிமான, நிதி மற்றும் இராணுவ உதவிகளை சுமார் 75 பில்லியன் டாலர்களை வழங்கியது.
மேலும் அமெரிக்கா, உக்ரைனுக்கு 60% போர் உதவி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.