அமெரிக்காவில் தடுப்பூசி போட்ட தாதிக்கு கொரோனா!
உலகளவில் கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் அண்மையில் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கொரோனா வைரஸை ஒழிப்பதில் 95 % செயற்திறன் கொண்ட பைசர் நிறுவத்தின் தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், வயதில் மூத்தவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பைசர் தடுப்பூசியைப் செலுத்திக் கொண்ட தாதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மேத்யூ என்ற 45 வயதான குறித்த தாதி கடந்த 18ஆம் திகதி தான் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது.
தடுப்பூசி போட்டதால் கையில் ஒரு நாளைக்கு புண் இருந்ததை தவிர வேறு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந் நிலையில் தடுப்பூசி போட்ட 6 நாட்களுக்கு பிறகு மேத்யூவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்தார். இதன்போது அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதேவேளை தடுப்பூசி போட்ட ஒரே வாரத்தில் நர்சுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.