பல்கலைக்கழகங்கள் ஆரம்பம் - வெளியான அறிவிப்பு
start
universities
University Grants Commission
By Jaso
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் பிறழ்வினால் பாதிப்பு ஏற்படாவிட்டால், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
தற்போது 25 வீத மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சில பல்கலைக்கழக விடுதிகளில் 3,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ள காரணத்தினால், அவர்களை மீளவும் அழைத்தால் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடையே கொவிட் தொற்று பரவும் அபாயம் ஏற்படுமென அவர் கூறியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்