வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகள்: பல்கலைக்கழக விண்ணப்பங்களைக் கோருவதில் தாமதம்

Sri Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Education
By Shalini Balachandran Apr 05, 2026 09:44 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

உயர்தரப் பரீட்சை முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்குப் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தாலும் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோருவதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) எந்தத் தயார் நிலையிலும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறைந்தபட்சம் விண்ணப்பப் படிவம் அடங்கிய கையேட்டை அச்சிடுவதற்குக்கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அத்தோடு அச்சிடுவதைத் தவிர்த்து இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்குவதற்குக் கூட அந்தக் கையேடு இதுவரை தயாரித்து முடிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அணுமின் நிலையத்தில் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் : ஈரான் எச்சரிக்கை

அணுமின் நிலையத்தில் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் : ஈரான் எச்சரிக்கை

பரீட்சைத் திணைக்களம்

குறித்த விடயத்தை ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கையேடு தயாரித்து முடிக்கப்பட்டிருந்தால் பரீட்சை முடிவுகள் வெளியான உடனேயே அதனை ஆணைக்குழுவின் இணையதளத்தில் பதிவேற்றியிருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகள்: பல்கலைக்கழக விண்ணப்பங்களைக் கோருவதில் தாமதம் | University Application For Gce Al 2025 Batch

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான அனைத்து அறிவுறுத்தல்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஒவ்வொரு பீடத்திற்கும் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை, குறித்த அனைத்து விபரங்களும் இந்தக் கையேட்டிலேயே இடம்பெறுகின்றன.

ஏனைய ஆண்டுகளைப் போலவே இம்முறையும் முடிவுகள் வெளியிடப்படும் திகதிகளைப் பரீட்சைத் திணைக்களம் மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தது.

இருப்பினும், விண்ணப்பங்களைக் கோர முடியாமல் போன இந்த நிலைமைக்கு நிர்வாகத்தில் நிலவும் கடும் மந்தகதியே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

முடிவுகள் வெளியான மறுநாளில் இருந்து விண்ணப்பங்களைக் கோருவதே இதற்கு முன்னர் தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையாகும்.

மற்றுமொரு அமெரிக்க வானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்

மற்றுமொரு அமெரிக்க வானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்

வசதிக்குறைபாடுகள் 

இணையதளம் வழியாக விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்குவது குறித்து கடந்த நாட்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டபோதிலும், சில பகுதிகளில் நிலவும் வசதிக்குறைபாடுகள் காரணமாக அந்தப் பகுதி மாணவர்களுக்கு அநீதி ஏற்படும் என்ற அடிப்படையில் கையேட்டை அச்சிட்டு விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கையேட்டை அச்சிட்டுப் பெறுவதில் தாமதம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் இணையதளம் வழியாகப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகள்: பல்கலைக்கழக விண்ணப்பங்களைக் கோருவதில் தாமதம் | University Application For Gce Al 2025 Batch

இதற்கிடையில், நிலவும் சூழ்நிலையில் இந்த மாத இறுதிக்குள் கூட விண்ணப்பங்களைக் கோர முடியாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கையேட்டை அச்சிடுவதற்கு குறைந்தபட்சம் மூன்று வார காலமாவது தேவைப்படுவதே இதற்குக் காரணமாகும்.

உயர்தரப் பரீட்சைக்குப் பிறகு மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுவதில் ஏற்படும் தாமதங்கள் குறித்து கடந்த காலம் முழுவதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அந்த நிலைமையைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ஹரினி அமரசூரியவும் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜைகள் கைது!

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜைகள் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொழும்பு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016