தீர்வில்லையேல் தீவிரமடையவுள்ள பல்கலைக்கழக தொழிற்சங்க நடவடிக்கை
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 03 ஆம் திகதிஆரம்பித்துள்ள தொடர் பணிப்புறக்கணிப்பு இன்றும் (08) தொடர்கின்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களில் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று (08) நடைபெறும் கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காவிடின் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டம்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சம்பத் உதயங்க, இன்றைய கலந்துரையாடலில் சம்பள வெட்டு தொடர்பான அமைச்சரவை பத்திரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்வு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றதாக தெரிவித்தார்.
அத்துடன் இந்த வேலை நிறுத்தத்துடன் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளதாக தொழிற்சங்க பொது மாநாட்டின் இணைச் செயலாளர் கே.எல்.டி.ரிச்மன் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |