யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவன் மயக்கமுற்று உயிரிழப்பு
Sri Lanka Police
Batticaloa
Jaffna
By Sumithiran
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இளவாலையை சேர்ந்த விமலேந்திரன் விதுசன் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,
ஏற்கனவே இருதய வியாதி
குறித்த இளைஞர் கடந்த 28ஆம் திகதி திடீரென மயக்கமுற்றுள்ளார். இந்நிலையில் இளவாலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு ஏற்கனவே இருதய வியாதி இருப்பதாக தெரியவருகிறது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை இளவாலை காவல்துறையினர் நெறிப்படுத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி