50 வருடங்களுக்கு பின்னர் கொழும்பு மாநகரசபையை இழந்தது யானை
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பு மாநகர சபையை (CMC)தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி (UNP)தற்போது அதன் அதிகாரத்தை இழந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு, வடக்குப் போரில் அப்போதைய அரசாங்கம் வெற்றி பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான UPFA அரசாங்கம் நாட்டின் மற்ற அனைத்து உள்ளூராட்சி மன்றங்களையும் கைப்பற்றியபோதிலும் ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாநகர சபையை கைப்பற்றியது.
கை மாறாத கொழும்பு மாநகரசபை
2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கான ஐ.தே.கவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின்னர், ஐ.தே.கவின் ஆதரவுடன் ஒரு சுயாதீனக் குழு வெற்றி பெற்றது.
தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கொழும்பு மாநகரசபை ஒரு தொங்கு சபையாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
