ரணில் இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) 79 வது ஆண்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 7 ஆவது ஆண்டு விழா இன்று (20.09.2025) காலை 9.00 மணிக்கு சிறி ஜெயவர்தனபுரவில் உள்ள மோனார்க் இம்பீரியல் வளாகத்தில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
'உங்கள் கருத்தைப் பேசுங்கள், அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிக்க ஒன்றாக நில்லுங்கள்' எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சித் தலைவர்களுக்கும் அஞ்சலி
இந்நிகழ்வில் எதிர்க்கட்சி மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு உரையாற்ற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குழு கலந்து கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் மறைந்த அரசியற் கட்சித் தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
