சீனி விலை உயர்வின் பின்னணியில் நடந்தது என்ன?

UNP People Ruwan Wijewardene SriLanka
By Chanakyan Sep 10, 2021 07:29 AM GMT
Report

அவசரகால விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் எந்தவொரு உணவு பொருளினதும் விலையையும் அரசாங்கத்தால் குறைக்க முடியாமல் போயுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே அதனை மீளப்பெறுவதே தற்போது பொறுத்தமான நடவடிக்கையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற இணையவழி கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

களஞ்சியசாலைகளில் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதால் அதன் விலை அதிகரிக்கவில்லை. மாறாக சீனியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தகர்களிடம் டொலர் இன்மையே அதன் விலை அதிகரிப்பிற்கு காரணமாகும். 

அவசரகால விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் எந்தவொரு உணவு பொருளின் விலையையும் குறைக்க முடியாமல் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

தற்போது செய்ய வேண்டியது சகல அவசரகால விதிமுறைகளையும் மீளப்பெறுவதாகும்.

மக்களுக்கு நியாயமான விலையில் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படும் என்ற போர்வையில் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தத் தவறியது தற்போதைய அரசாங்கத்தின் பெரும் பலவீனமாகும்.

1978ஆம் ஆண்டு சூறாவளி ஏற்பட்ட போது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும், சுனாமி ஏற்பட்ட போது அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அவசர கால விதிமுறைகளை பிரகடனப்படுத்தி மக்களுக்கு நன்மைகளை செய்திருந்தார்.

எனினும்  கொரோனா  நிலைமையின் போது ராஜபக்க்ஷ அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த  அவசரகால விதிமுறைகளால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் பெறவில்லை.

மேற்கூறப்பட்ட முதல் இரு சந்தர்ப்பங்களிலும் அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்ட போது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவசரகால விதிமுறைகளை பிரகடனப்படுத்தி சீனி மற்றும் அரிசி என்பவற்றை கைப்பற்றுவதற்கு முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புக்களில் மகாவலி வலயத்தை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள இராஜாங்க அமைச்சர் ஸ்ரீபால கம்லத்தினுடைய களஞ்சியசாலையும் முற்றுகையிடப்பட்டது.

எவ்வாறிருப்பினும் அதன் பின்னரும் அவர் இராஜாங்க அமைச்சு பதவியை வகிப்பதற்கான தார்மீக உரிமை உள்ளதா? களஞ்சியசாலைகளில் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதால் அதன் விலை அதிகரிக்கவில்லை.

மாறாக சீனியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தகர்களிடம் டொலர் இன்மையே அதன் விலை அதிகரிப்பிற்கு காரணமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026