இலங்கையில் சீரற்ற காலநிலை! இருவர் உயிரிழப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கேகாலை வரக்காபொல கஸ்வான பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட மண் சரிவுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேவேளை, மண்சரிவுக்குள் சிக்கி இருந்த இரண்டு பேரை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
மண் சரிவுக்குள் சிக்கி இருந்த ஒருவர் மீட்கப்படும் போதே உயிரிழந்து காணப்பட்டுள்ளார். அந்த இடத்திலேயே மண்ணில் சிக்கி இருந்த உயிரிழந்த நபரின் தாயாரை மீட்ட இராணுவத்தினர் அவரை வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய தினம் முழுவதும் பெய்த கன மழைகாரணமாக கேகாலை தோலன்கமுவ கஸ்வான பிரதேசத்தில் இரண்டு வீடுகளுக்கு மேல் மண் மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 55 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை காலி உடுகம - அளுத்வத்தை பிரதேசத்தில் கிங் கங்கையின் கிளை ஆற்றின் பலத்தில் சென்றுக்கொண்டிருந்த 25 வயதான இளைஞன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
