வவுனியாவில் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல்: பேருந்து நிலையத்தில் அமைதியின்மை
வவுனியாவில் (Vavuniya) அரச மற்றும் தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வவுனியா புதியபேருந்து நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கி இன்று (03.12.2024) காலை புறப்படத் தயாராக இருந்த அரசபேருந்து தரப்பினருக்கும் தனியார்பேருந்து தரப்பினருக்கும் இடையிலேயே இந்த வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மேலும் பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துச் சபையின் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருவதுடன், அரசபேருந்து மற்றும் தனியார் பேருந்தும் காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |