தென்னாபிரிக்காவில் மோசமான சாதனையை பதிவு செய்த இந்திய அணி
தென்னாபிரிக்காவில் இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியை 55 ஓட்டங்களுக்குள் சுருட்டிய இந்திய அணி பின்னர் துடுப்பெடுத்தாடி இந்த சாதனையை படைத்துள்ளது.
எந்தவொரு ஓட்டமும் சேர்க்காமல்
இதன்படி 153 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை இழந்திருந்த இந்திய அணி மேலும் எந்தவொரு ஓட்டமும் சேர்க்காமல் மிகுதி ஆறு விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.
அடுத்தடுத்து வீழ்த்தப்பட்ட விக்கெட்டுகள்
இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 153/4 என்ற நிலையில், லுங்கி என்கிடி முதலில் கேஎல் ராகுலை வீழ்த்தினார். அதே ஓவரில் ரவீந்திர ஜடேஜாவும், ஜஸ்பிரித் பும்ராவும் வீழ்த்தப்பட்டனர். அடுத்த ஓவரில் விராட் கோலி மற்றும் பிரசித் கிருஷ்ணாவை ககிசோ ரபாடா வெளியேற்றினார். முகேஷ் குமார் ரன் அவுட் ஆனார். 11 பந்துகளுக்குள் இந்தியா கடைசி 6 விக்கெட்டுகளை ஓட்டங்கள் எதுவும் சேர்க்காமல் இழந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |