களத்தில் இறங்கிய மைத்திரி - முக்கிய அமைச்சரும் பங்கேற்பு
பல வருடங்களுக்குப் பின்னர் நேற்றையதினம் (15) ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ஜூம் தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன மற்றும் ஏனைய கட்சி தலைவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் தேச விமுக்தி ஜனதா கட்சியின் போடி அப்புஹாமி. ஆகியோரின் நினைவாக ஒரு நிமிடம் ம மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொள்கை செயல் திட்டத்தை தயாரிப்பது குறித்து நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. வெற்றிலை சின்னத்தின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயற்பாட்டை மீண்டும் உத்வேகத்துடன் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.